Latestஇந்தியாஉலகம்

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்ப்பட்டது முதல் முறையாக ஈரான் ஒப்புதல்

துபாய், ஜன -11 புதன்கிழமையன்று 176 பேருடன் தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து பறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதை ஈரான் முதல் முறையாக ஒப்புக்கொண்டது. ஈரான் புரட்சி படைகளுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய ராணுவப் பகுதியில் பறந்தபோது அந்த விமானம் மனித தவறினால் சுடப்பட்டதாக ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது. ஈரான் ராணுவத்தின் அந்த அறிக்கை அந்நாட்டு தொலைக்காட்சியிலும் வாசிக்கப்பட்டது.

அதோடு இதற்கு பொறுப்பான தரப்பினர் ராணுவத்திற்கு உட்பட்ட நீதித்துறையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அச்சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில கூறப்பட்டது. உக்ரைன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் விடியற்காலை தெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கீவ் புறப்ப்பட்ட வேளையில் இயந்திரக் கோளாறினால் விழுந்து நொறுங்கியதாக இதற்கு முன ஈரான் கூறிக்கொண்டது.

ஆனால் அந்த விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்க்கூடும் என தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் , கனடா போன்ற சில மேற்கத்திய நாடுளும் கூறிவந்தன. ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானி பக்தாத்தில் டுரோன் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதறகு பதிலடியாக ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகனைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது.

ஈரானிலிருந்து ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டதற்கான சிவப்பு கதிர் சமிக்ஞை அடையாளங்கள் அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு கிடைத்தாகவும் அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான அறிகுறி கிடைத்ததாகவும் இதற்கு முன் அமெரிக்க உளவு நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தோர் எம்-1ஏவுகனையால் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சான பெண்டகன் அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமான பயணிகளில் 63 கனடா பிரஜைகள், 82 ஈரான் பிரஜைகள் மட்டுமின்றி சுவிடன் ஆப்கான், ஜெர்மன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் இருந்தனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!