Latestஉலகம்

ஈரான் ஏவுகணை தாக்குதல் அமெரிக்க ராணுவ வீர்ர்கள் 11 பேர்  காயம்

வாஷிங்டன், ஜன 17 – ஈராக்கிலுள்ள அமெரிக்க  தளம்   மீது  ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அமெரிக்க படையினர்  நிறுத்தப்பட்டிருக்கும்  தளம் மீது  ஈரான் அந்த தாக்குதலை  நடத்தியதை அமெரிக்கா உறுதிப்படுத்தியது.

ஜனவரி 3ஆம் தேதி   பக்தாத்தில் அமெரிக்கா நடத்திய  டுரோன்  தாக்குதலில்  ஈரான் புரட்சிய ராணுவ படையின் தளபதில் ஜெனரல்  காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு  பதில் நடவடிக்கையாக  ஈரான்  இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலைத்  தொடர்ந்து அமெரிக்க ராணுவ வீரர்களில் சிலர்  மருத்துவ பரிசோதனைக்காக  ஜெர்மனியிலுள்ள அமெரிக்க நிலைகளுக்கு கொண்டுச்  செல்லப்பட்டனர். உடல் திடகாத்திரமான பின்னர்  மீண்டும் சேவையில்  ஈடுபடுவதற்காக அந்த ராணுவ வீரர்கள்  ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளுக்கு திரும்புவர் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!