Latestஉலகம்

ஈரானில் பிரிட்டன் தூதர் கைது

தெஹ்ரான், ஜன.13 – பிரிட்டன் தூதரை ஈரான் கைது செய்தது. உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது ஈரானுக்கான பிரிட்ஷஷ் தூதர்  ராப் மெக்காரே கைது செய்யப்பட்டார்.

அவர் மூன்று மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது தூதர் கைது செய்யப்பட்டதை அனைத்துலக அரச தந்திர விதிகளுக்கு முரணானது அல்லது அனைத்துலக சட்ட மீறல்  என பிரிட்டன் குற்றம்சாட்டியது.

தெஹ்ரானிலிந்து  புதன்கிழமை காலையில்  176 பேருடன் கீவ் புறப்பட்ட‌ உக்ரைன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து  உயிரிழந்த விமான பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம்  தெஹ்ரானில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரிட்டன் தூதர் கலந்து கொண்டதாகவும் அக்கூட்டம் பின்னர் போராட்டமாக மாறியதாகவும் கூறப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக ராப் மெக்காரே மீது குற்றம்சாட்டப்பட்டதாக  ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. தெஹ்ரானில் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஈரானிய அரசு அதிகாரிகளை கொலைகாரர்கள் என்று கூறி கூச்சலிட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைப்பதற்காக ஈரான் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!