Latestமலேசியா

ஈப்போவில் நகைக் கடையில் கொள்ளை

ஈப்போ, ஜன 14 – மகிழம்பு, ஜாலான் பைக்கில் உள்ள நகைக்கடையில் புகுந்த இரு கொள்ளையர்கள் 10,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளுடன் தப்பிச் சென்றனர். இரண்டே நிமிடங்களில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஸ்மாடி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
மாலை மணி 3.10அளவில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது அந்த நகைக்கடையின் குடும்ப உறுப்பினர்களில் நால்வர் அங்கு இருந்துள்ளனர். தலைக்கவசம் அணிந்த நிலையில் கடையில் புகுந்த அந்த இரு ஆடவர்கள் கண்ணாடி பேழையை உடைத்து அதிலிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு காற்றாய்ப் பறந்துள்ளனர்.

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!