Latestமலேசியா

ஈப்போவில் தீ விபத்து – மாலா & சாந்தி உயிர் தப்பினர்

ஈப்போ, ஜன 14 – ஈப்போ லாஹாட் சாலையில்  கடை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீச் விபத்தில்   பத்திரிக்கை விற்பனையாளர்களான  மாலா மற்றும் சாந்தி ஆகிய இரு சகோதரிகள் உயிர் தப்பினர்.  இவர்கள் இருவரும் கடந்த 30 அல்லது 40 ஆண்டுகாலமாக இந்த கடை வீட்டில் தங்கி  பத்திரிகைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

தீ விபத்து குறித்து இன்று மாலை மணி  6 அளவில்  தகவல் கிடைக்கப்  பெற்றதைத் தொடர்ந்து  மூன்று தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீர்ர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.  சுமார் 40 நிமிட  நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த  தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!