Latestமலேசியா

இ.பி.எப் லாப ஈவு அதிகரிக்கப்படுமா?

கோலாலம்பூர், பிப் 15 –  ஒரு கோடியே 45 லட்சத்து 90,000 சந்தாதாரர்கள் இ.பி,எப் வழங்கவிருக்கும் லாப ஈவு அதிகரிக்குமா என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கடந்த 10 ஆண்டு காலமாக இ.பி.எப் தனது சந்தாதாரர்களுக்கு 6 விழுக்காட்டிற்கும் கூடுதலான லாப ஈவை வழங்கி வந்துள்ளது.

2009, 2010, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில்தான் 6 விழுக்காட்டிற்கும் குறைந்த லாப ஈவுத் தொகையை இ,பி,எப் வழங்கியுள்ளது. உள்நாட்டு பங்கு சந்தை மற்றும் பொருளாதாரம் தேக்கநிலையில் இருந்தாலும் 6 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே இ.பி,எப் லாப ஈவை வழங்கி வந்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இ.பி,எப் வழங்கிய கூடுதலான லாப ஈவு என்றால் அது 2017 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட 6.9 விழுக்காடு லாப ஈவை கூறமுடியும். 14ஆவது பொதுத் தேர்த்தல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த லாப ஈவு வழங்கப்பபட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஈ.பி.ப் தனது சந்தாதாரர்களுக்கு 6.15 விழுக்காடு லாப ஈவு வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே கடந்த ஆண்டுக்கான இ.பி.எப் தொகைக்கு அதன் நிர்வாகம் வழங்கும் லாப ஈவுத்தொகை எவ்வளவாக இருக்கும் என்பதுதான் சந்தாரர்களின் இப்போதைய கேள்வியாக உள்ளது.

இப்போதைய சந்தாதார்ர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு 1 விழுக்காடு லாப ஈவு தொகைக்கும் இ.பி.எப்பிற்கு 900கோடி ரிங்கிட் தேவையாகும் . கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் இ,பி,எப் மொத்த முதலீடு வருமானமாக 35 பில்லியன் ரிங்கிட்டை அல்லது 3,500கோடி ரிங்கிட்டை இ.பி.எப் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அதன் மொத்த முத்தலீடு வருமானம் 50 பில்லியன் ரிங்கிட்டாக இருந்திருந்தால் தனது சந்தாதாரர்களுக்கு 5.6 விழுக்காடு லாப ஈவுத் தொகையை பெறுவதில் .இ.பி.எப்பிற்கு பிரச்னை இருக்க்காது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

2014ஆம் ஆண்டு முதல் மலேசியாவிற்கு வெளியே செய்துள்ள தனது முதலீடுகளின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தையே சந்தாதாரர்களின் லாப ஈவு வழங்கும் தொகைக்கு இ,பி,எப் அதிகமாக நம்பியிருக்கிறது. அரசாங்கத்தின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக திகழும் இ.பி.எப் திருப்திகரமான லாப ஈவு தொகையை வழங்க வேண்டும் என அதன் சந்தாதார்ர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!