Latestமலேசியா

இஸ்லாத்தின் கண்ணோட்டத்தைதான் கூறினோம்; சுற்றறிக்கையாக பள்ளிகூடங்களுக்கு அனுப்பியது கல்வி அமைச்சு – ஜாக்கிம்

கோலாலம்பூர், ஜன 15 – கல்வியமைச்சின் அறிக்கை வெளியான சிறிது நேரத்தில் ஜாக்கிம் தமது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளது. கல்வி அமைச்சு கேட்டதற்கு ஏற்பவே தமது நிலைப்பாட்டையும் வழிகாட்டியையும் ஜாக்கிம் வழங்கியதாகவும் ஆனால் அதனை சுற்றறிக்கையாக பள்ளிகூடங்களுக்கு அனுப்பியது கல்வி அமைச்சின் முடிவை பொறுத்தது என்றும் அது கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் அது கல்வி அமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நாங்கள் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கருத்தை மட்டும் கூறினோம். எவ்வகையிலும் பொங்கல் கொண்டாட்டத்தை தடை செய்ய சொல்லவில்லை. அதே சமயத்தில் அதனை கொண்டாடும் நண்பர்களுக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் முஸ்லிம்கள் வாழ்த்து கூறுவது அனுமதிக்கப்படுகிறது என ஜாக்கிம் விளக்கியுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!