Latestமலேசியா

இஸ்தானா நெகாரா பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி; பேரரசர் தம்பதியர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 26 – இஸ்தானா நெகாரைவைச் சேர்ந்த 7 பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பேரரசர் மற்றும் பேரரசியார் இருவரும் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்
இருப்பினும், பேரரசர் மற்றும் பேரரசியார் இருவருக்கும் இந்நோய் தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது என இஸ்தானா நெகாரா அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொற்று கண்ட 7 பணியாளர்களும் சீரான நிலையில் உள்ளதாகவும் தர்போது அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே சமயத்தில், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளவும் பணிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!