Latestஉலகம்

இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்கா தடை விதித்தது

வாஷிங்டன், பிப் 15 –  இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல் மற்றும் சட்டவிரோத படுகொலையில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் அவருக்கு அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்தார்.

ஷவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ,நாவும் இதர அமைப்புகளும் ஆவணப்படுத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் கடுமையானதாவும் மற்றும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருப்பதாக தாம் கருதுவதாக மைக் பொம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்ட இந்த தடையைத் தொடர்ந்து சில்வாவும் அவரது குடும்பத்தினரும் வாஷிங்டனில் நுழைவுதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ராணுவ தளபதியாக சில்வா நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் ஐ,நா கடுமையாக குறைகூறின. ராணுவ தளபதியாக சில்வா பெயர் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து தனது அமைதிகாக்கும் படையிலிருந்து இலங்கை ராணுவத்தை கடந்த செப்டம்பர் மாதம் ஐ,நா விலக்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!