Latestமலேசியா

இருவருக்கு புதிதாக கோவிட் 19 வைரஸ்

கோலாலம்பூர், பிப் 15 –  இருவருக்கு புதிதாக கோவிட் 19 வைரஸ் தொற்றியிருப்பதை சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் இன்று உறுதிப்படுத்தினார். அந்த இருவரும சீனப் பிரஜைகள் என அவர் சொன்னார்.
இவர்களில் ஒருவர் 27 வயதுடைய வர்த்தகர் என்றும் அவர் தற்போது கெடா சுல்தானா பஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு மையத்தில் பரிசோதனை நடத்தியபோது அவர் அந்த வைரஸ் கொண்டிருப்பதற்காக அறிகுறி காணப்பட்டதாக சுல்கிப்ளி கூறினார்.

பிப்ரவரி 14ஆம் தேதி அந்த ஆடவர் மலேசியாவில் நுழைந்துள்ளார். அவர் சீனா குவாங்ஷாவைச் சேர்ந்தவர். கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட 21ஆவது நபர் மலேசியாவில் வசித்துவரும் சீனப் பெண்ணாவார். அவர் ஜனவரி 22ஆம் தேதி முதல் 30ஆம்தேதிவரை சீனாவுக்கு வருகை மேற்கொண்டிருந்தார் என டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!