Latestமலேசியா

இராட்ச முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது

சரவாக் உலு சுவாயில் உள்ள ஒரு தோட்டம் வழியாக ஓடும்ரஆற்றில் 4.2 m நீளம் கொண்ட முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது. வனவியல் கழகத்தின் வனவிலங்கு நடவடிக்கைக் குழு, போலீசார் மற்றும் அங்கு வாழும் கிராம மக்களின் உதவியோடு அந்த முதலையை வேட்டையாடியது. ஆற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட முதலையின் வயிற்றில் மனித எலும்புகளும் துணிகளின் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அந்த எலும்புகளும் துணிகளின் எச்சங்களும் 33 வயது இந்தோனேசிய தோட்ட ஊழியர் அப்துல் சிதுஜு உடையதாக இருக்கக்கூடும் என வனவியல் கழகத்தின் செயலாக்க அதிகாரி ஜூல்கிப்லி முகமட் அதோன் தெரிவித்தார். மீரி மற்றும் பிந்துலுக்கு இடையிலான தோட்டத்தில் இருக்கும் ஆற்றங்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் நவம்பர் 29 முதல் முதலையைத் தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த எச்சங்களின் பகுதிகள் மனித கை மற்றும் உடல் பகுதிகள தென்பட்டதாக தெரியவந்துள்ளது. சதுப்பு நிலத்தில் முதலையை கண்ட எஸ்டேட் ஊழியர் தந்த எச்சரிக்கையை அடுத்து போலீசார் அந்த முதலையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சரவாக் வனவியல் கழகத்தை கேட்டுக் கொண்டனர். இதனிடையே, மக்கள் ஆபத்தான மிருகங்கள் எதையாவது கண்டால் உடனே வனவியல் கழகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர்  கேட்டுக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!