Latestமலேசியா

இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி சொல்வோம் – மலேசிய இந்து சங்கம்

கோலாலம்பூர், ஜன 14 – இயற்கைக்கும் நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. பயிர்களின் வளர்ச்சிக்கு மழையைத் தந்து வளம் தரும் சூரிய பகவானுக்கு உழைப்பின் முதல் அறுவடையை பொங்கல் வைத்து படைத்து நன்றி கூறி வழிபட்டு வருவது நமது மரபாகும் என மலேசிய இந்து சங்கம் பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறது.

பொங்கல் விழா நான்கு நாட்கள் அதாவது போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு.அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூசை வழிபாடுகளும் இடம்பெறுகின்றன.

சிறப்புமிகு தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கலை நாம் இவ்வருடம் ஜனவரி 15ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடவிருக்கிறோம்.

சூரிய பொங்கல் வைக்க உகந்த நேரம் மலேசிய நேரப்படி காலை 7.30 – 08.55 மணி மற்றும் காலை 10.30 – 11.55 மணி வரையாகும். அன்றைய தினம் பலருக்கு வேலை நேரமாக இருப்பதால் மாலையில் பொங்கல் வைக்க எண்ணுபவர்கள் மாலை 5 – 8 மணி வரை பொங்கல் வைத்து வழிப்படலாம் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான்  தெரிவித்துள்ளார்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான் மகாகவி பாரதி. எனவே, இயற்கைக்கு நன்றி கூறும் அதே வேளையில், நம் உறவினர்களோடும் சுற்றத்தார்களுடனும் மகிழ்ச்சியாகவும் சமயம், கலாச்சார சார்ந்த நல் சிந்தனையோடும் இந்த திருநாளைக் கொண்டாடுவோம். நன்றி பாராட்டும் சிறந்த சமுதாயமாக விளங்குவோம்.  அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!