Latestஇந்தியாஉலகம்

இப்படியா முடிவெட்டுவது? தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

பூந்தமல்லி, ஜன 20 – சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த மோகனா என்பவர் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சமையல் பாத்திரம் சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 17). இவர், குன்றத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இதனிடையே, வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த மோகனா, தனது மகன் சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த சீனிவாசன், சலூன் கடைக்கு சென்று முடியை முழுமையாக வெட்டாமல் ஸ்டைலாக வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனா, “இப்படியா முடி வெட்டுவது? சரியாக வெட்டக்கூடாதா?, படிக்கிற வயதில் ஏன் இப்படி வெட்டினாய்?” என மகனை கண்டித்துள்ளார்.

தனது தாய் திட்டியதால் மனம் உடைந்த சீனிவாசன், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!