Latestஇந்தியா

இந்திய ரூபாயின் மதிப்பு உயர நோட்டுகளில் இந்து கடவுள் லட்சுமியின் படம்- பரிந்துரைத்த சுப்பிரமணி சுவாமி

மஹராஷ்ட்ரா, ஜன 16 – இந்தியா ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் அண்மையக் காலமாக சரிந்து வரும் இந்திய பணத்தின் மதிப்பு உயரும் என்றும் இந்தப் பரிந்துரைக்கு பிரதமர் மோடி உரிய பரிசீலனை வழங்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணி சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய நாட்டின் பண நோட்டுகளில் விநாயகர் படம் பதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் வினைகளை தீர்ப்பவர் என்ற அடிப்படையில் அந்நாடு அவ்வாறு செய்திருக்கின்ற நிலையில் இந்திய நோட்டுகளில் ஏன் லட்சுமி படம் பதிக்கப்படக்கூடாது என அவர் கேட்டுள்ளார்.

தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் போர் பதற்றம் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலையை பெருமளவு உயர்த்தியுள்ளது. அதேசமயத்தில் இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்து வருகிறது. இதற்கு ஈடு செய்யும் வகையில் பணமதிப்பை உயர்த்த சுப்பிரமணி சுவாமி இதை பரிந்துரை செய்துள்ளார். இதுபற்றி யாரும் தவறான கண்ணோடத்தில் பார்க்க வேண்டாம் என்றும் மஹராஷ்தராவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!