Latestஇந்தியாமலேசியா

இந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து

கோலாலம்பூர், மார்ச் 12 – இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் புதிய முயற்சியாக இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியாவுக்குள் நுழைய வழங்கப்படும் விசாக்கள் அனைத்தும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதோடு விசா இல்லாமல் அனுமதிக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏப்ரல் 15-ம் தேதி வரை இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் யாரேனும் இந்தியா வர வேண்டும் என்ற கட்டாய சூழல் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

அவசர தேவை இல்லை என்றால் வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இந்தியா வருவதை தவிர்க்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் இந்தியர்கள் உள்பட அனைவரும் குறைந்தபட்சம் 14 நாட்கள் கட்டாய தனிமைபடுத்தப்படுவார்கள்.

இந்தியர்கள் அவசர தேவை இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பினால் அவர்களும் 14 நாட்கள் கட்டாய தனிமைபடுத்தளுக்கு உள்படுத்தப்படுவார்கள்

இந்தாலியில் வேலை மற்றும் கல்வி பயில சென்ற இந்தியர்கள் கொரோனா குறித்த சோதனைகளை இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளலாம். சோதனையில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட நபர்கள் விருப்பப்பட்டால் இந்தியாவுக்கு வரலாம்.

அவ்வாறு நாடு திரும்பும் இந்தியர்கள் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமை படுத்தப்படுவார்கள் .

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!