Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது

டெல்லி, மார்ச் 25 – கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அதனை தடுக்கும் முயற்சியாக நேற்று மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்த 3 வார காலம் சமூக விலகல் என்பது மிக முக்கியமானது, எனவே உங்களை வேண்டிக் கொள்கிறேன் இந்த உத்தரவை பின்பற்றுங்கள் என மோடி நேற்று மக்களுடனான நேர்காணலில் மோடி தெரிவித்தார்.
21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.

இந்த ஊரடங்கினால் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம். இந்த 21 நாட்கள் நாம் சுய ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி சென்று விடுவோம். இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தனித்து இருப்பதை தவிர வேறு வழி கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

சீனா, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் சமூக விலகலை, பின்பற்றாததால் பெரும் உயிர் இழப்புகளை சந்தித்து வருகின்றன. அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம் நாம் கொரோனாவைத் தடுப்போம் என மோடி மக்களை கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!