Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 80 கொலைகள், 91 பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன

புதுடெல்லி, ஜன 10 –இந்தியாவில் சராசரி ஒவ்வொரு நாளும் 80 கொலைகள் மற்றும் 91 பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன என இந்தியாவின் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த குற்றங்களை ஆண்டு முழுவதும் கணக்கிடும் போது ஆண்டுக்கு சுமார் 29 ஆயிரம் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டைவிட இது 1.3 விழுக்காடு அதிகமாகும். பெரும்பாலான கொலைகள் சொத்து தகராறு, பழிக்குப்பழி வாங்குதல் மற்றும் ஆதாயத்தை கருதும் நோக்கத்துடன் நடந்துள்ளன.

2017-ம் ஆண்டைவிட 19 ஆயிரம் வழக்குகள் அதிகரித்து 2018ஆம் ஆண்டில் 3 லட்சத்து 78 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதேபோல் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் கடத்தல் சம்பந்தமாக 1 லட்சத்து 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!