Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் கோவிட் – 19 வைரஸ் நோயாளிகளுக்கு ரோபோ மூலம் மருந்துகள்

சென்னை, மார்ச் 24 -சென்னையில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரோபோக்கள் மூலம் மருந்து மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அந்த தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தாதிகள் மற்றும் மருத்துவர்கள் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோக்கள் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் வார்டுகளுக்கு செல்வதற்கு முன் ஒலி எழுப்பும். நோயாளி கதவை திறந்து மருந்து, உணவு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ரோபோவில் தெரிவிக்கப்பட்டிருக்கம் வீடியோ திரையில் மூலம் நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

நோயாளிகளுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ரோபோ மூலம் மருத்துவரிடம் கேட்கலாம், ரோபோ வார்டில் இருந்து வந்தவுடன் கிருமி நாசினி மூலம் அந்த இடம் தூய்மைப்படுத்தப்படும். தொடக்க கட்டமாக இந்த ரோபோக்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பயன்படுத்துவது குறித்து அங்குள்ள மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!