Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் கோவிட் -19 மரண எண்ணிக்கை 511ஆக உயர்வு, மேலும் 10 பேர் மரணம்

புதுடில்லி, மார்ச் 24 – இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 511ஆக அதிகரித்திருக்கிறது. அதே வேளையில் மரண எண்ணிக்கையும் 10 ஆக உயர்ந்த்து. இந்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களிலும் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி கேட்டுக் கொண்டபோதிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் 101 பேருக்கும், கேராளாவில் 92 பேருக்கும் கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 2 வயது குழந்தைக்கும் கோவிட் -19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தையின் தாத்தா ஜெர்மனியிலிருந்து இத்தாலி வழியாக இம்மாதம் 7ஆம் தேதி இந்தியா திருப்பியிருந்தார். எனினும் கடந்த வாரம் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் தமிழகத்தில் கோவிட் -19 வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் இன்று மேலும் மூவருக்கு இந்த தொற்று பரவியதாக தெரிகிறது. ஏற்கனவே 12 பேருக்கு இந்த தொற்று இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்போது மேலும் மூவருக்கும் கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பதாக தகவல் வந்துள்ளதால் பொதுமக்கள் மெத்தன போக்குடன் செயல்பட வேண்டாம் என அமைச்சர் விஜயகாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!