Latestஉலகம்மலேசியா

இத்தாலியிருந்து 76 மலேசியர்கள் & மலேசியர் அல்லாத பிரஜைகள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டனர்

செப்பாங், மார்ச் 26 – கோவிட்-19 தொற்றினால் இத்தாலி மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். இத்தாலி தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசிய பேரிடர் நிவாரண உதவி திட்டத்தின் கீழ் இத்தாலியிருந்து 76 மலேசியர்களும் மலேசியர் அல்லாத பிரஜைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டனர்.

சிறப்பு ஏர் ஏசியா விமானம் மூலம் 81 பேர் இன்று காலை 10.06 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர் என Nadma எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விமானத்தில் 81 பயணிகள் உட்பட 5 மலேசிய சுகாதார ஊழியர்கள், 1 வெளியுறவு அமைச்சர், 20 ஏர் ஆசியா விமான பணியாளர்கள் மற்றும் Nadma நிறுவனத்தின் அதிகாரி ஒருவரும் இருந்தனர்.

அந்த 81 பேரும் KLIAவில் உள்ள விமான பேரிடர் பிரிவில் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நீலாயில் உள்ள AKEPT எனப்படும் உயர்கல்வி தலைமைத்துவ கல்வி நிலையத்தின் கண்காணிப்பு மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!