Latestஉலகம்

இத்தாலியின் தென்பகுதிக்கு கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயம்

ரோம்  ,மார்ச் 27 – கோவிட் 19 வைரஸ் தற்போது இத்தாலியில் தென் பகுதியில் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது . நாட்டின் வடபகுதியில் Lombardy மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் பெரிய அளவில் புரட்டிப்  போட்டு மக்களுக்கு அதிகமான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கோவிட்- 19 வைரஸ் தற்போது இத்தாலியின் தென்பகுதி வட்டாரங்களில் பரவ தொடங்கியிருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாலியில் இதுவரை 8,217 பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர். அதே வேளையில் அந்நாட்டில் இதுவரை  80 ,539 பேருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 712 பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.  இத்தாலியில் இதுவரை 40க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும் மரணமடைந்துள்ளனர். மருத்துவர்கள் ,தாதியர்கள் மருத்துவ தொழில் துறை சார்ந்த தொழில்நுட்பாளர்கள், ஆம்புலன்ஸ் வண்டிகளில் பணியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களும் அங்கு இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இத்தாலியின் தென் பகுதியில் இதுவரை 74 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர். ஆனால் அங்கு இந்த நிலைமை இனிமேல் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!