Latestமலேசியா

இணைய காதல் மோசடி; ரிம 22 ஆயிரம் இழப்பு

குவாந்தான், ஜன 4 – குவாந்தான் லீப்பீஸில் பணியாற்றி வரும் அரசாங்க பெண் ஊழியர் ஒருவர் இணைய காதல் மோசடியில் 22,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். அவரை ஏமாற்றிய அந்த ஆடவன் மூன்று வாரத்திற்கு முன்புதான் சமூக வலைத்தளத்தின் மூலம் அப்பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளான்.

37 வயதான் அப்பெண்ணிடம் தாம் லண்டனில் வசிப்பதாகவும், நட்பின் அடையாளமாக பரிசு ஒன்றை  அனுப்பவிருப்பதாகவும் கூறியுள்ளான். ஆனால், அந்த பரிசு தனக்கு வேண்டாம் என அப்பெண் கூறியுள்ளார். இருப்பினும் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி அந்த பரிசுப் பொருள் விமான நிலையத்திற்கு வந்தடைந்து விட்டதாக வேறொரு ஆடவனிடமிருந்து அப்பெண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பணம் செலுத்தாமல் பரிசுப் பொருளை வெளியே எடுத்துவர முடியாது என்று கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து 24 டிசம்பர் முதம் 31 டிசம்பர் வரை 9 முறை மொத்தம் 22,000 ரிங்கிட்டை அப்பெண் வழங்கப்பட்ட வங்கி எண்ணில் போட்டுள்ளார்.

ஆனால், தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும் என்ற கோரப்படவே, அப்பொழுதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் உடனடியாக லிப்பிஸ் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இவ்வழக்கை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!