Latestசினிமாமலேசியா

ஆஸ்ட்ரோவில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

பிகில் (ப்ரிமியர்) – 15 ஜனவரி, 6.30pm

சன் தொலைக்காட்சி (அலைவரிசை 211/ எச்டி அலைவரிசை 234)

*ஆஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அதிரடி விளையாட்டுத் திரைப்படமான பிகில், மைக்கேல் என்ற ரவுடி தனது தந்தையின் கொலைக்குப் பிறகு காற்பந்து சாம்பியனாக வேண்டும் என்ற தன் கனவை  கைவிட்ட போதிலும் தன் நண்பன் காயமடைந்தால், ஒரு பெண் காற்பந்து அணியைப் பயிற்றுவிக்க முன்வருவதை மிக அழகாக சித்தரிக்கின்றது.

நடிகர்கள்: விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷிராஃப், கதிர் மற்றும் விவேக்.


யார் உங்கள் கோலிவுட் கிங் (ப்ரிமியர்)

  • பகுதி 1: 15 ஜனவரி, 7.00pm (சிவகார்த்திகேயன் vs விஜய் சேதுபதி)
  • பகுதி 2: 16 ஜனவரி, 7.00pm (கார்த்தி vs விஷால்)

விண்மீன் எச்டி (அலைவரிசை 231)

*எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

இரு பிரபலமான கோலிவுட் ஹீரோக்கள் உள்ளடக்கியது இந்நிகழ்ச்சி. இதில் அவர்களின் ரசிகர்கள் புகழ், சம்பளம், சமீப பாக்ஸ் ஆபிஸ் வெற்றி மற்றும் மிக முக்கியமாக ஒரு சமூக ஊடக கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அவர்களில் யார் ‘பிரசித்தி’ பெற்ற நடிகர் போன்றவற்றை கருத்தில் கொண்டு இக்கோலிவுட் பிரபலங்களை ஒப்பிட்டு யார் ஒருவர் முதலிடம் பெறுவார் என்பதை விவாதிப்பர்.


ரசிக்க ருசிக்க பொங்கல் சிறப்பு (ப்ரிமியர்) – 15 ஜனவரி, 7.30pm

விண்மீன் எச்டி-இல் (அலைவரிசை 231)

*எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

 பொங்கல் சிறப்பை முன்னிட்டு, பால கணபதி வில்லியம் தனது உணவு வேட்டையை கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்திய சைவ உணவகங்களில் தொடருவார்.

 


அடடா பொங்கல் (ப்ரிமியர்)

பகுதி 1: 15 ஜனவரி, 9.00pm | பகுதி 2: 16 ஜனவரி,  9.00pm

விண்மீன் எச்டி-இல் (அலைவரிசை 231)

உள்ளூர் கலைஞர்களை உள்ளடக்கி பல நகைச்சுவை அம்சங்களைக் கொண்ட இந்த  டெலிமூவி, ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் தன் தந்தையுடன் இணைந்து நவீன விவசாயத்தை முயற்சிக்கிக்கும் வேளையில் பல சோதனைகளை எதிர்கொள்வதோடு மலரும் காதலை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதை மிக அழகாக சித்தரிக்கின்றது.


பாட்டி மற்றும் டெனிஸுடன் பொங்கல் (ப்ரிமியர்)

பகுதி 1: 15 ஜனவரி, 10.00pm | பகுதி 2: 16 ஜனவரி, 10.00pm

விண்மீன் எச்டி-இல் (அலைவரிசை 231)

*எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நகர் புறங்களிலும் மற்றும் கிராமங்களிலும் எவ்வாறு பொங்கல் கொண்டாப்படுகின்றது என்பதனை ஆராய்ந்து மிக சுவரஸ்யமாக வெளிப்படுத்தகிறது இந்நிகழ்ச்சி.  இவ்வனுபவத்தை கண்டறிய டெனஸ் மற்றும் ஜானகி பட்டி பயணத்தை  தொடர்வதோடு தங்களது பயணத்தின் போது  பிரபலமான மலேசிய கலைஞர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கின்றனர்.


என்ஜிகே (ப்ரிமியர்) – 15 ஜனவரி, 11pm

விண்மீன் எச்டி-இல் (அலைவரிசை 231)

*எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

 நடிகர்கள்:  சூர்யா, ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி

நந்தா கோபாலன் குமரன் என்ற சமூக சேவகர் தனது கிராமத்திற்கு உதவ அரசியலில் சேர நிர்பந்தப்படும் நிலையில் அதிகாரத்தில் உயிர்வாழ தந்திரங்களை கற்றுக் கொள்ளும்போது அவர் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதை இத்திரைப்படம் சித்தரிக்கின்றது.


நம்ம வீட்டுப் பிள்ளை (ப்ரிமியர்) – 16 ஜனவரி, 6.30pm

சன் தொலைக்காட்சி (அலைவரிசை 211/ எச்டி அலைவரிசை 234)

*ஆஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல்

தன் சகோதரியின்பால் அளவு கடந்த அன்பு கொண்ட ஒரு சகோதரன் அவளை தன்னுடன் ஒத்துப்போகாத ஒரு முரடனுக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவர்களின் உறவு நீடிக்குமா?


கைதி (ப்ரிமியர்) – 16 ஜனவரி, 7.30pm

விஜய் (அலைவரிசை 224/ எச்டி அலைவரிசை 232)

நடிகர்கள்:  கார்த்தி, நரேன் மற்றும் KPY  புகழ் தீனா

முன்னாள் குற்றவாளியான தில்லி, சிறையை விட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக தனது மகளை சந்திக்க முயற்சிக்கிறார். இருப்பினும், காவல்துறை அதிகாரி பெஜோய் திட்டமிட்ட போதைப்பொருள் சோதனை காரணமாக அவரது முயற்சிகள் தடைப்படுகின்றன.


நம் வாழ்க்கை நம் கையில் (ப்ரிமியர்) – 16 ஜனவரி, 9.00pm

வானவில் (அலைவரிசை 201)

*எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

புகழ்பெற்ற உள்ளூர் பேச்சாளர் டாக்டர் காதர் இப்ராஹிமின் பேச்சு நிகழ்வு, பலதரப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றியதோடு மிக முக்கியமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்களின் கனவை தொடர வலியுறுத்தியுள்ளது.


சங்கத்தமிழன்  (ப்ரிமியர்) – 17 ஜனவரி, 6.30pm

சன் தொலைக்காட்சி (அலைவரிசை 211/ எச்டி அலைவரிசை 234)

*ஆஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, நிவேதா பெதுராஜ், ராஷி கன்னா மற்றும் சூரி

மாசு தொடர்பான கவலைகள் காரணமாக ஒரு செம்பு ஆலை கட்டும் திட்டங்களுக்கு எதிராக ஒரு கிராமம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஆனால் அவர்களின் தலைவர் இறக்கும் போது, ​​ஆலைக்குப் பின்னால் உள்ள நிறுவனம் அவர்களின் திட்டத்தை எளிதாக்க அவர் போன்று தோற்றத்தை கொண்ட ஒருவரை அனுப்புகிறது.


காளிதாஸ் (ப்ரிமியர்) – 17 ஜனவரி, 9.00pm

தங்கத்திரையில் (அலைவரிசை 241)

*எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்நடிகர்கள்: பரத் மற்றும் ஆன் ஷீட்டல்

காளிதாஸ் எனும் காவல்துறை அதிகாரி, தொடர்ச்சியாக நிகழும் பெண்களின் மரணங்களுடன் தொடர்புடைய மர்மவலையில் சிக்கிக் கொள்கிறார். மேலும் அக்கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறார்.


நையாண்டி பொங்கல் (ப்ரிமியர்) – 17 ஜனவரி, 9.30pm

வானவில் (அலைவரிசை 201)

*எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

பொங்கல் பானை செய்தல், கரும்பு பிழிதல், அரிசி சாக்குகளை சுமந்து செல்லுதல் மற்றும் உரியடித்தல் (பாரம்பரிய விளையாட்டு) என பல வேடிக்கை அம்சங்களை கொண்டது இப்பொங்கல் டெலிமேஜ். குபென், ஹேமாஜி, கோகிலா, கானா, ரவின், சுபாஷினி, ஷாமினி மற்றும் நந்து ரமேஷ் ஆகிய உள்ளூர் கலைஞர்கள் இவ்விளையாட்டில் கலந்து சிறப்பிக்க வெற்றிபெறும் அணித் தலைவருக்கு ‘முத்தல்  மரியாதை’ செய்யப்படும்.


விஸ்வாசம் (ப்ரிமியர்) – 18 ஜனவரி, 6.30pm

சன் தொலைக்காட்சி (அலைவரிசை 211/ எச்டி அலைவரிசை 234)

*ஆஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

நடிகர்கள்: அஜித் குமார், நயன்தாரா மற்றும் அனிகா

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஒரு உண்ணதமான உறவை மிக அழகாக வெளிக்கொணர்கிறது இத்திரைப்படம். மேலும், மகளின் நல்வாழ்வுக்காக பெற்றோரின் தியாகத்தையும் சித்தரிக்கிறது.  தன் மகள் ஸ்வேதா சண்டையின்போது காயமடைந்ததால், துக்கு துரை என்ற தலைவன், தன் மனைவி நிரஞ்சனாவிடமிருந்து பிரிகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஸ்வேதாவைப் பாதுகாக்க முயற்சிக்கிறான்.


பேட்ட (ப்ரிமியர்) – 19 ஜனவரி, 6.30pm

சன் தொலைக்காட்சி (அலைவரிசை 211/ எச்டி அலைவரிசை 234)

*ஆஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

நடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, எம்.சசிகுமார், சிம்ரன் த்ரிஷா மற்றும் மாலவிகா மோகனன்

ஒரு பணிவான விடுதி வார்டனாக பணிபுரியும் காளி பல ரகசியங்களைப் பாதுகாக்கிறார். ஆபத்தான குண்டர்களின் குழு காலியின் பாதையை கடக்கும்போது சுவாரஸ்யமான திருப்பங்கள் ஏற்படுகின்றன.


கலக்கல் காலை – 13-17 ஜனவரி, 6.00am – 10.00am, ராகா

* SYOK செயலியின் வழி எங்கும் கேளுங்கள்

அறிவிப்பாளர்: சுரேஷ் மற்றும் அஹிலா

கலக்கல் காலையின் போது, அவ்வங்க அறிவிப்பாளர்கள் சுரேஷ் (பொங்கல் புகலேந்தியாகவும்) மற்றும் அஹிலா (பொங்கல் பூஞ்சோலையாகவும்) வேடம் கொண்டு பொங்கல் கொண்டாட்டங்களின் பரிணாமங்கள் குறித்து விவாதிப்பர்.  கரும்பு, பொங்கல் பானைகள், மா இலைகள், கோலம், பாரம்பரிய உடைகள் மற்றும் போங்கி கொண்டாட்டம் போன்றவை அவற்றுள் அடங்கும். அவர்கள் ஜனவரி 15 அன்று கரும்பை பாரம்பரிய முறையில் கடித்து மெல்லவும் முயற்சிப்பர்! ராகாவின் சமூக வலைத்தளங்களில் சுரேஷ் மற்றும் அஹிலாவின் ரகலைகளை கண்டு மகிழுங்கள்: Facebook, YouTube, Twitter  மற்றும்  Instagram

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!