Latestவிளையாட்டு

ஆசிய வெற்றியாளர் போட்டியே சிலாங்கூர் குழுவின் இலக்கு பயிற்சியாளர் சத்தியநாதன்

கோலாலம்பூர் டிச 21 2021ஆம் ஆண்டுக்கான ஏ.சி.எல் எனப்படும் ஆசிய வெற்றியாளர் காற்பந்து லீக் போட்டியில் விளையாடுவதற்கு சிலாங்கூர் குழுவை தகுதிபெறச்செய்வதே தமது அடுத்த இலக்கு என அக்குழுவின் பயிற்சியாளரான பி.சத்தியநாதன் கூறினார். ஆசிய காற்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ஏ.சி.எல் லீக் போட்டியின் கதவு இப்போது மலேசிய குழுக்களுக்கும் திறந்துவிடப்பட்டிருப்பதால் அப்போட்டியில் விளையாடுவதற்கு சிலாங்கூர் குழுவை தகுதிபெறச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்போவதாக அவர் சொன்னார்.

தற்போது 2020ம் ஆண்டுக்கான சூப்பர் லீக் காற்பந்து போட்டிக்கு சிலாங்கூர் காற்பந்து குழுவை தயார்படுத்தும் தீவிர முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் சத்தியநாதன் தெரிவித்தார். அனைத்து ஆட்டக்கார்களும் பயிற்சியில் பங்கேற்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூரைச் சேர்ந்த முகமட் சஃபுவான் பஹாருடின் தொழில் ரீதியில் சிலாங்கூர் குழுவுக்கு விளையாட்விருப்பதாகவும் இதர இறக்குமதி ஆட்டக்காரர்கள் அனைவரும் தொடர்ந்து குழுவில் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் சத்தியநாதன் தெரிவித்தார்.

பேரா குழுவின் முன்னாள் ஆட்டக்காரர் பெரன்டன் கான் , பி.கே.என்.எஸ் கிளப்பின் நிக்லோஸ் ரயன் சுவிராட், ரோட்னி கெவின் மற்றும் தவ்பிக் அர் ரஷிட் ஆகியோரும் சிலாங்கூர் குழுவில் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் அவர் சொன்னார். இவ்வாண்டு சிலாங்கூர் குழு பிரிமியர் லீக் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றேதாடு மலேசிய கிண்ண காற்பந்து போட்டியில் அரையிறுதியாட்டத்திற்கும் தகுதி பெற்றது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!