Latestமலேசியாவிளையாட்டு

ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷீப் போட்டி கிஷோனா – தீனா தாய்லாந்தில் குறுகிய கால பயிற்சி

கோலாலம்பூர், ஜன 30 –  அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதிவரை மணிலாவில் நடைபெறவிருக்கும் ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷீப் போட்டிக்கு தயாராகும் பொருட்டு மலேசியாவின் முன்னணி மகளிர் பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் இந்தோனேசியாவின் ரெக்சி மைனாக்கி தலைமையில் தாய்லாந்தில் இரு வேறு இடங்களில் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு வருன்றனர்.

இந்தோனேசியாவின் முன்னாள் இரட்டையர் ஆட்டக்காரரும் மலேசிய பேட்மிண்டன் குழுவின் இரட்டையர் ஆட்டக்காரர்களுக்கு முன்ளாள் பயிற்சியாளராகவும் இருந்துள்ள ரெக்சி மைனாக்கி தலைமையிலான அந்த குறுகிய கால பயிற்சி மலேசிய மகளிர் விளையாட்டாளர்களுக்கு குறிப்பாக உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டிக்கு தயாராகும் எஸ். கிஷோனா மற்றும் எம் .தீனா ஆகியோருக்கு பெரும் ஊக்குவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிது.

ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷீப் போட்டிக்கு முன்னதாக மகளிர் குழுவை வலுப்படுத்தும் முயற்சியாக மலேசிய பேட்மிண்டன் சங்கம் தாய்லாந்து பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. அந்த போட்டியில் முதல் நான்கு இடங்களை பெற்றால் மட்டுமே இவ்வாண்டு மே மாதம் டென்மார்கில் நடைபெறவிருக்கும் உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மலேசிய மகளிர் குழு தகுதி பெறமுடியும்.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய பேட்மிண்டன் குழுவின் பயிற்சியாளராக பணியாற்றியுள்ள அனைத்துலக அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரரான ரெக்சி மைனாக்கியிடருந்து பயனுள்ள சில நுனுக்கங்களை கற்றுக்கொள்வதற்கு இந்த குறுகியகால பயிற்சி கிஷோனாவுக்கும் இரட்டையர் ஆட்டத்தில் பியர்லி டானுடன் ஜோடி சேர்ந்துள்ள தீனாவுக்கும் பெரும் பயனாக இருக்கும் என மலேசிய பேட்மிண்டன் சங்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆசிய குழு பேட்மிண்டன் போட்டியில் மலேசிய மகளிர் குழுவில் ஒற்றையர் பிரிவில் விளையாடும் வாய்ப்பை சீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிஷோனா பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மலேசிய பெண்கள் குழுவினர் ஜப்பான், மற்றும் ஹங்காங்குடன் மோதவிருக்கின்றனர்.
பி பிரிவில் தென் கொரியா, இந்தியா மற்றும் கஸகஸ்தான் இடம் பெற்றுள்ளன. சி பிரிவில் தாய்லாந்து , இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய அணிகளும் டி பிரிவில் சீனா, தைவான், சிங்கப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!