Latestமலேசியா

அஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்

கோலாலம்பூர் டிச. 7- பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை அவரது இல்லத்தில் சந்தித்த அம்னோவைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை  அம்னோ பொதுப் பேரவையின் பேராளர்கள் கடுமையாக சாடினர்.

கட்சியின் அந்த தலைவர்களின் நம்பகத்தன்மை குறித்து பினாங்கு பேராளர் டத்தோ ஓமான் பவுட்ஷார் கேள்வி எழுப்பினார்.மானியம் பெறுவது தொடர்பில் அந்த சந்திப்பு நடந்ததாக சம்பந்தப்பட்ட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிக் கொண்டாலும் இதே போன்ற காரணத்தை தான் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேறிய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இப்போது மேலும் 17 பேர்  மானியம் கோரி சந்திப்பு நடத்தியுள்ளனர். கடந்த  18 மாதங்கள் தான் நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஆனால் பல ஆண்டுகாலமாக பாஸ் கட்சியும் பி.கே.ஆரும் எதிர்கட்சியாக இருந்துள்ளன. அவர்கள் ஒருமுறை கூட ஒதுக்கீட்டுக்காக அம்னோவிடம்  கையேந்தவில்லையென அந்த பேராளர் கடுமையாக சாடினார்

18 மாதங்கள் தான் நாம் எதிர்க்கட்சியாக போராடி வருகிறோம் .இந்த அம்னோ  தலைவர்களின் கௌரவம் எங்கே போனது என ஓமார் வினவினர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!