Latestமலேசியா

அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசாங்கம் கடன் வாங்கியதா?

கோலாலம்பூர், நவ.28 – அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கட்டாயமாக கடன் வாங்கியதாக அம்னோ கூறியிருக்கும் குற்றச்சாட்டை நிதி அமைச்சர்  லிம்  குவான் எங் மறுத்தார். நெகிரி செம்பிலான் சட்டமன்ற கூட்டத்தில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியிருக்கும் இந்த குற்றச்சாட்டு வழக்கமான ஒன்று என்பதோடு பொறுப்பற்ற  மற்றும் உண்மைக்குப் புறம்பான ஒரு தகவல் ஆகும் என்று கூறினார்.
2019 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அரசாங்கத்தின் வருமானம் 68.8 பில்லியன் வெள்ளியாகும். ஊழியர்களுக்காக வழங்கப்படும் ஊதியம் 19.9 பில்லியன் வெள்ளி  என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் லிம் குவான் எங் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான ஆற்றலை  அரசாங்கம் கொண்டுள்ளது. இது தவிர இதர நிதி நெருக்கடியை சமாளிக்க கூடிய ஆற்றலும் அரசாங்கத்திற்கு இருப்பதாக அவர் சொன்னார்.   கிளந்தான் அரசாங்கத்தைப் போன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத  நெருக்கடியை கூட்டரசு அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என  லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.
முகமட் ஹசான் தவறான இலக்கோடு கூட்டரசு அரசாங்கத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உண்மையில் அவர் கிளாந்தான் அரசாங்கத்தைத்தான்  அவர் சுட்டிக்காட்டி இருக்க வேண்டுமே தவிர ‌ கூட்டரசு அரசாங்கத்தை அல்ல எனஅரசாங்கத்தின் அல்ல என  லிம் குவான் எங் கூறினார். 2019ஆம் ஆண்டு இறுதிவரை கிளாந்தான் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உட்பட நடவடிக்கை செலவுகளுக்காக 10 கோடி வெள்ளியை அக்டோபர் 14ம் தேதி தமது அமைச்சு அங்கீகரித்ததாகவும் தெரிவித்தார்.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!