Latestமலேசியா

அன்வார் மீதான அறிக்கை : பி.கே.ஆர் குறைகூறலை ஐ.ஜி.பி மறுத்தார்

கோலாம்பூர், ஜன 16 – பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்த விசாரணை தொடர்பாக தாம் வெளியிட்ட அறிக்கை அரசியல் நோக்கத்தை கொண்டிருப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் மற்றும் பி.கே.ஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுட்டியோன் கூறியிருந்ததை போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் மறுத்தார்.

இந்த விவகாரத்தில் தாம் அரசியல் சித்து விளையாட்டு எதனையும் விளையாடவில்லையென அவர் சொன்னார். பாலியல் தொந்தரவில் சம்பந்தப்பட்டதாக அன்வாருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டை தொடர்வதற்கு உடல் ரீதியாக ஆதாரம் தேவை என்றுதான் தாம் கூறியிருந்ததாகவும் இதில் எங்கேயும் அரசியல் நோக்கம் இல்லையென ஹமிட் படோர் தெரிவித்தார்.

எனது அறிக்கை குறித்து சிலர் குறைகூறியிருப்பதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அந்த அறிக்கையில் நான் அரசியல் விளையாட்டு விளையாடவில்லை என ஹமிட் பாடோர் கூறினார்.

குற்றச்சாட்டை தொடர வேண்டியதில்லை என சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்துவிட்ட பிறகு போலீஸ் படைத் தலைவரின் அந்த அறிக்கை அன்வார் குற்றம் புரிந்ததை உறுதிப்படுத்தும் தோற்றத்தை கொண்டிருப்பதாகவும் இது போன்ற அறிக்கைகளை வெளியிடும்போது நிபுணத்துவத்தையும் விவேகத்தையும் கொண்டிருக்க வேண்டும் என சைபுடின் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு நிருபிக்கப்படும்வரை ஒருவர் நிரபிராதி என்ற குற்றவியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிராக ஹமிட் படோரின் அறிக்கை அமைந்திருந்தது கண்டிக்கத்தக்கது என நிக் நஸ்மி சுட்டிக்காட்டியிருந்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!