Latestமலேசியா

அன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார்  யூசோப் போலீசில் புகார்

கோலாலம்பூர்.   டிச.7 – பி கே ஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டு தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முகமட் யூசோப் ராவுத்தர் போலீசில் புகார் செய்துள்ளார்.

26 வயதுடைய யூசோப் இன்று காலை செந்துல் போலீஸ் நிலையத்தில் இந்த புகாரை செய்துள்ளார். இந்த புகாருடன் எழுத்துப்பூர்வமான சத்திய பிரமாண வாக்குமூலம் பிரகடனத்தையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

எழுத்துப்பூர்வமான சத்திய பிரமாண வாக்குமூலத்தில் தாம் விவரமாக கூறியிருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என யுசோப் கேட்டுக்கொண்டார்.

அன்வாரின் முன்னால் ஆய்வு அதிகாரியான  முகமட் யூசோப்   பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர காலஞ்சென்ற எஸ்.எம்  முகமட் இட்ரிஸின்  பேரன் ஆவார். செய்தியாளர் கூட்டத்தை நடத்திய பின்னர் குறிப்பிட்ட தரப்பினர் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் யூசோப் தமது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

இதனிடையே  யூசோப்பின் இந்த குற்றச்சாட்டை அன்வார் மறுத்தார். தமது கௌரவத்தை சீர் குலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி இதுவென்றும் விரைவில் இந்த விவகாரம் தொடர்பில் தாம் போலீசில் புகார் செய்யவருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!