Latestமலேசியா

அன்வார் பாணியில் கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும்  என மிரட்டப் பட்டேன் –  கலைமுகிலன் சாட்சியம்

கோலாலம்பூர் டிச.7 தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி  சோஸ்மா எனப்படும் 2012ஆம்   ஆண்டின் பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின்கீழ்  20 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம் பாணியில்  கன்னிப் போகும் அளவுக்கு கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும் என தாம் மிரட்டப்பட்டதாக பழைய உலோக பொருள் விற்பனையாளர் .கலை முகிலன் தெரிவித்தார்.

தாம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  லாக்காப்அறைக்குக்கு அருகிலேயே பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் ராமசாமியும் வைக்கப்பட்டிருப்பதாக  போலீஸ் விசாரணை அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக  பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான கலைமுகிலன் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சுங்கை பூலோ சிறைச்சாலையில் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உளவியல் ரீதியில் தான் துன்புறுத்தப்பட்ட தாக கலைமுகிலன் தெரிவித்தார். குற்ற விசாரணை முறை சட்டத்தின் 133 வது விதியின் கீழ் நீதிபதி அசுரா அல்வியிடம் கலைமுகிலன் சாட்சியமளித்தார்.

நான்கு போலீஸ் அதிகாரிகள் தம்மிடம் வாக்குமூலம் எடுத்ததாக அவர்  சொன்னார். பயங்கரவாத துடைத்தொழிப்புப் பிரிவின் தலைவர் டத்தோ அயூப்கான் மற்றும் கைது நடவடிக்கைக்கு தலைமையேற்ற போலீஸ் அதிகாரி மணிவண்ணன் கேட்டுக் கொண்டபடி தான் எழுதிக் கொடுத்தால் தம்மை விடுவித்து விடுவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கலைமுகிலன் சொன்னார்.

எல் டி டி   எனப்படும்தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று எழுதிக்கொடுக்கும்படி அவர்கள் வலியுறுத்தினர். விடுதலைப்புலிகள் பயங்கரவாத மன்றத்தை தாம் நடத்தியதாகவும் அவர்கள் எழுதி கொடுக்கும்படி சொன்னார்கள்.

தங்களுக்கு சாதகமாக விஷயத்தை எழுதச் சொல்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன் அதனை தொடர்ந்து இனிமேல் எதனையும் எழுத முடியாது என்று கூறிவிட்டேன்.

தாங்கள் கேட்டதை எழுத கொடுக்க முடியாவிட்டால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பொருளை எடுக்க போவதாகவும் இதன் மூலம் எனது மனைவி மற்றும் பார்வை இழந்த எனது தந்தையும் சுஷ்மா சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார் என அவர்கள் கூறியதாகவும் கலைமுகிலன் தெரிவித்தார்.

ஒரு புத்தகத்தை வைத்து இருந்ததற்காக ஐஎஸ்எல் இயக்கத்துடன் தொடர்பு இருந்த இறந்தவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தம்மீது 12 குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரலாம் என்றும் அந்த போலீஸ் அதிகாரிகள்  தெரிவித்தனர்.

தான் குற்றமற்றவர் என்பதால் தன்னை விடுவிக்கும்படி அந்த போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதாகவும் ஆனால் அவர்கள் சொஸ்மாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எவரையும் இதுவரை தாங்கள் விடுதலை செய்யவில்லை என அவர்கள் தெரிவித்ததாக வும் கலைமுகிலன் கூறினார். சொஸ்மா சட்டத்தின் கீழ் 500 பேரை கைது செய்திருக்கிறோம் இவர்கள் எவரும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கருப்பு கண்ணாடியை அணிவித்தனர் அந்த கண்ணாடியில் எதையுமே பார்க்க முடியவில்லை. போலீஸ் விசாரணையின் போது தொடர்ந்து பல்வேறு சித்திரவதைக்குள்ளானது மற்றும் என் குடும்பத்தினரும் இப்படியெல்லாம் சித்ரவதைக்கு உள்ளாகி வார்கள் என்பதை நினைத்து ஒரு கட்டத்தில் பயங்கரவாத குற்றத்தை  ஒப்புக்கொண்டு விடலாம் என்று கூட  நினைத்ததாகவும் கலைமகளின் தெரிவித்தார்

கலைமகள் இடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றதை தொடர்ந்து அவரது புகார் குறித்த தீர்ப்பை பிறிதொரு தேதிக்கு அறிவிப்பதாக அதுல நீதிபதி கூறினார். இதனிடையே நீதிமன்றத்தின் இடைவேளையின்போது செய்தியாளர்களிடம் கலைமுகிலன் பேசினார் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரித்ததாக சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுதாபம் கொண்டவர்கள் என அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!