Latestமலேசியா

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து ஆடவர் தற்கொலை

கோலாலம்பூர், ஜன 17 – லெம்பா பந்தாய் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி அருகே, ஆடவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

29 வயதான அந்த ஆடவர் அடுக்குமாடி மேல் பகுதியிலிருந்து கீழே குதித்து இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்க காணப்பட்டதாக அங்கிருந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த ஆடவர் இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் அந்த ஆடவர் தனது குடும்பத்தாருடன் அந்த  அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளதாக பிரிக்பில்ட்ஸ் மாவட்ட போலீஸ் அதிகாரி சைருல்நிசாம் முகமட் சைனூடின் தெரிவித்தார். மேலும், அந்த ஆடவரின் மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே,  அந்த ஆடவரின் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சைருல்நிசாம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!