லண்டனில் கோஹினூர் வைரம்: மீட்க கோரிய வழக்கு தள்ளுபடி!

India
Typography

லண்டன், ஏப்ரல்.22- பிரிட்டனின் தலைநகரான லண்டனில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான கோஹினூர் வைரத்தை மீட்க வேண்டும் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் கைவிரித்தது.

உலகப் புகழ்ப்பெற்ற 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோஹினூர் வைரம், தற்போது லண்டனின் உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த வைரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கோஹினூர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

வெளிநாட்டில் உள்ள சொத்தை மீட்கும்படி நீதிமன்றத்தினால் உத்தரவிட முடியாது. இவ்வாறு பல்வேறு நாடுகளிலுள்ள சொத்துக்களை மீட்கக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிந்தும் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கோஹினூர் வைரத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியிள்ளது. அதனால் இந்த மனுத் தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS