அமெரிக்கா- வடகொரிய மோதல்: ஆட்டங்காணுமா, அட்சயதிருதியை?

India
Typography

புதுடில்லி, ஏப்ரல்.17- விரைவில் வரவிருக்கும் அட்சயதிருதியைக்கு ஒரு பொட்டு தங்கமாவது வாங்குவது நன்மை தரும் என்று நம்புகிறவர்களுக்கு பெரும் சுமை காத்திருக்கிறது. அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் தங்கத்தின் விலை மேலும் எகிறும் என்று நம்பப்படுவதே இதற்கு காரணம்.

இப்போதே உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தவளை மாதிரி மேல் நோக்கித் தாவிக் கொண்டே போகிறது. கிட்டத்தட்ட அவுன்ஸ் ஒன்றுக்கு (அதாவது 32 கிராம்) 1,288 டாலராக அதிகரித்து இருக்கிறது.

இது மேலும் மேலும் உயரும். தங்கத்தின் விலையை உச்சத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் தற்போது அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான மோதல்கள் முற்றி வருகின்றன.

எந்த நேரத்திலும் போர் மூண்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ஒருவேளை இருதரப்புக்கும் இடையே போர் மூண்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் இது 3ஆவது உலகப் போருக்கு வித்திடலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

அதேவேளையில், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்வரும் 28ஆம் தேதி அட்சயதிருதியை வருவதால் அன்றைய தினம் தங்கம் வாங்கும் பழக்கமும் நம்பிக்கையும் கொண்ட இந்தியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS