ஜாகிர் நாயக் கடப்பிதழை ரத்துச் செய்ய இந்தியா திட்டம்!

பிற மாநிலங்கள்
Typography

புதுடில்லி, ஏப்ரல் 18- சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் அனைத்துலக கடப்பிதழை மீட்டுக் கொள்ள இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஜாகிர் மீது கைது நடவடிக்கை எடுக்க இண்டர்போலின் உதவியை நாடவும் அது எண்ணம் கொண்டுள்ளது.

தற்போது ஜாகிர் நாயக் சவூதி அரேபியாவில் இருப்பதாகவும் அவரின் கடப்பிதழை மீட்டுக் கொண்டால் அவர் இந்தியாவிற்கு திருப்ப வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார் என அமலாக்க இயக்குநர் குழுமம் கூறியுள்ளது. அவர் இந்தியாவிற்குள் வந்து விட்டால் அவரைக் கைது செய்யவும் அவர் மீது விசாரணை நடத்தவும் சுலபமாக இருக்கும் அது கூறியது.

இவ்விவகாரம் தொடர்பாக ஜாகீருக்கு கடப்பிதழை வழங்கிய மும்பை கடப்பிதழ் அலுவலகத்தின் உதவியை நாட அமலாக்க அதிகாரிகள் முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. 

பண மோசடி வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய சமய போதகரான ஜாகிர் நாயக் மீது மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அனுமதி இல்லாத கைதாணையைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கு தொடர்பாக அவருக்கு பல முறை அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. இருப்பினும் அவர் ஒருமுறைக் கூட விசாரணைக்கு வரவில்லை என மத்திய ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜாகிர் நாயக் மீது ஜாமீன் அனுமதி இல்லாத கைதாணைப் பிறப்பித்தது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS