இந்திய இராணுவத்தை உளவு பார்த்த பாகிஸ்தானின் "ஸ்மேஷ்" ஆப்ஸ்  நீக்கம்  

பிற மாநிலங்கள்
Typography

புதுடில்லி, மார்ச் 16-  இந்திய  இராணுவ நடவடிக்கைகளை உளவுபார்க்க பாகிஸ்தான் பயன்படுத்திய ஸ்மேஷ் ஆப்-பை  கூகுள்  நீக்கியுள்ளது.  விவேகக் கைப்பேசிகளுக்கான கூகுளின் பெட்டகத்தில்  (Google Play Store) ஸ்மேஷ் எனும்  செயலியைப் பாகிஸ்தானின் உளவு பிரிவான  ஐ.எஸ்.ஐ , இந்திய வீரர்களின் விவேக கைப்பேசிகளுடன் இணைக்க பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

 இதனால் இந்திய  பாதுகாப்புப் படை வீரர்களின்  கணினிகளும்  பாதிக்கப்பட்டன.  இந்த ஸ்மேஷ் செயலியைப் பதிவிறக்கம் செய்ததும், சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை இது களவாடத் தொடங்கும்.  குறிப்பாக தீவிரவாத எதிர் நடவடிக்கைகள், வியூகங்கள், துருப்புகளின் நடமாட்டம் போன்ற தகவல்களைப் பெற பாகிஸ்தான்  ஈடுபாடு காட்டியது. செல்போன் பேச்சு விபரம், குறுஞ்செய்திகள் மற்றும் போட்டோக்களையும் இந்த ஸ்மெஷ் ஆப்ஸை பயன்படுத்தி ஐஎஸ்ஐ உளவு அமைப்பினர் திருடி வருகின்றனர். 

மொபைல் போன் மற்றும் பேஸ்புக் கணக்கு என்பது ஒரு தரவுத் தளமாக உள்ளது.  இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள சர்வர் ஒன்றில் சேமிக்கப்படும். இதை கராச்சியை சேர்ந்த ஒருவர் இயக்கி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்மெஷ் என்ற ஆப்-பை உளவுபார்க்க  பாகிஸ்தான் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு ஊருவிளைவிக்கும்  இந்த சர்ச்சைக்குரிய  நிரலியைத் தனது பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் நீக்கிவிட்டது.

   

BLOG COMMENTS POWERED BY DISQUS