நடிகை ஸ்ரீரெட்டியின் அம்பலத்திற்கு  அடிபணிந்தது தெலுங்கு திரையுலகம்

பிற மாநிலங்கள்
Typography

ஐதராபாத், ஏப்.13- நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த  முன்னணி தயாரிப்பளர்கள்- இயக்குனர்கள் -நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி ஒட்டு மொத்த தென்னிந்நிய திரைத்துறையை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் பற்றிய விவரங்களை விரைவில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் டுவிட்டரில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் காரணமாக தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டி நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்தது.அந்தச் சர்ச்சையில் நடிகர் ரானாவின் தம்பியும் ஒரு எழுத்தாளரும் அகப்பட்டனர். 

 இந்த விவகாரம் தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி தெலுங்கான தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆகியோர் 4  வார காலத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது தெலுங்கு பிலிம் சேம்ப, ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் புகார்கள் குறித்து முழுமையாக  விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை 4 நாட்களில் அமைக்கப்படும் என்று கூறியுள்ளது. 20 பேர் கொண்ட இந்தக்குழு 10 பேர் திரைத்துறையில் இருந்தும் மற்றவர்கள் வேறு துறையை சேர்ந்தவர்களாகவும்  இருப்பர் என தெரிவித்தது.

தொடர்ந்து நடிகை படங்களில் நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கிக் கொண்டுள்ளது. இது பற்றி பேசிய அச்சங்கத்தின்  தலைவர் சிவாஜிராஜா. நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தெலுங்கு பிலிம்சேம்பர் விசாரணைக்குழுவை அமைத் துள்ளதால் அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும் நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்றும் நடிகை கூறிய குற்றச்சாட்டுகள் சங்க உறுப்பினர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாவும் அந்தச் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS