"கெஜ்ரிவாலை குண்டு வைத்துக் கொல்வோம்":  தொலைபேசி மிரட்டலால் பரபரப்பு 

பிற மாநிலங்கள்
Typography

டெல்லி, மார்ச் 31-  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  குண்டு வைத்து கொலை செய்யப்போவதாக வந்த தொலைபேசி மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது வீடு மற்றும்  அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று மாலை 4.30 மணியளவில்  டெல்லியின் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் பேசியவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். இதனையடுத்து போலீசார் வெடிகுண்டு  நிபுணர்களுடன் கெஜ்ரிவாலின்  வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். எனினும்,  வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.  

இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி அழைப்பு விடுத்த நபரைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS