'வொயிங் வொயிங்'.. இனி அமைச்சர் கார்களில் 'சிவப்பு விளக்கு' கிடையாது!

தமிழகம்
Typography

சென்னை, ஏப்ரல் 20- காவல்துறை மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்களில் சிவப்பு வண்ண சுழல் விளக்குகள் பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதால் பிரதமர் மோடி உட்பட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது வாகனத்தில் இருந்த சைரனை கழற்றியுள்ளனர்.

மத்திய அரசின் புதிய நடைமுறை படி, பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் யாரும் இனி சிவப்பு விளக்கை பயன்படுத்த முடியாது. இதனைப் பின்பற்றி தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் மற்ற அமைச்சர்களும் தனது காரில் இருந்த சைரன்களை கழற்றியுள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டசபை சபாநாயகர், மாநில அமைச்சர்கள், தலைமை செயலாளர் உட்பட 20 பிரபலங்கள் இனி 'வொயிங் வொயிங்' என்று சைரனைப் போட்டுக் கொண்டு செல்ல முடியாது.

BLOG COMMENTS POWERED BY DISQUS