அதிமுகவிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்- டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

தமிழகம்
Typography

சென்னை, ஏப்ரல் 19- கட்சி பலவீனமாக நான் காரணமாக இருக்க மாட்டேன். நேற்றே நான் அதிமுக கட்சியிலிருந்து ஒதுங்கி கொண்டேன் என தினகரன் செய்தியாளர்களிடம் அதிரடியாக தெரிவித்தார்.

சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் இன்று தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தன்னை நீக்குவதாக அமைச்சர்கள் திடீர் முடிவு எடுத்தது ஏதோ பயத்தில் எடுத்த முடிவாக தாம் கருதுவதாக அவர் கூறினார். மேலும், அமைச்சர்களுக்கு எதற்காக இந்த பயம் ஏற்பட்டுள்ளது என தெரியவில்லை எனவும் கூறினார்.

''கட்சியிலிருந்து என்னை நீக்குவதால் நல்லது நடக்கும் என்றால் அப்படியே நடக்கட்டும். கூட்டம், போட்டி கூட்டம் என உணர்ச்சிவசப்பட்டு எதையும் நான் பேச விரும்பவில்லை. இரு அணிகளும் இணைவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சலசலப்புகளால் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்ட கூடாது என்பதால் நான் நேற்று முதலே அதிமுகவிலிருந்து ஒதுங்கி கொண்டேன் எனக் கூறிய தினகரன், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து  விலக முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS