கட்சியிலிருந்து சசி, தினகரன் நீக்கமா? அமைச்சர்கள் அதிரடி முடிவு!

தமிழகம்
Typography

சென்னை, ஏப்ரல் 19- சர்ச்சைகளுக்கிடையில் சிக்கி கொண்டுள்ள அதிமுக கட்சியைக் காப்பாற்ற சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து முழுமையாக நீக்க அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அமைச்சர் கூட்டம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உடைந்து போயுள்ள அதிமுக கட்சியை ஒன்றிணைக்க ஓ.பன்னீர் செல்வம் பச்சை கொடி காட்டியிருந்தாலும் சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கக்கூடாது எனும் நிபந்தனையை விதித்தார். அதனை அடுத்து சசிகலா மற்றும் தினகரனை ஓரம் கட்டி விட்டு இரு தரப்பும் இணைய அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்கு சசிகலா அணியைச் சேர்ந்த சட்டசபை துணை சபாநாயகர் தம்பிதுரையும் இதற்கு ஆரதவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி இல்லத்தில் நடத்தப்பட்ட மூத்த அமைச்சர்களுடான கூட்டத்தில், தினகரன், சசிகலா ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பன்னீருடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், தொண்டர்களின் விருப்படி ஆட்சி அமையும் என்றும் ஒற்றுமையாக இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.  

BLOG COMMENTS POWERED BY DISQUS