"ஆயிரம் விளக்கு' தொகுதியில்  களம் இறங்குகிறார் உதயநிதி   

தமிழகம்
Typography

சென்னை, 18 மார்ச்-  தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில்   உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இம்முறை நடைபெறவிருக்கும்   சட்டப்பேரவை தேர்தலில்  தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், தி.மு.க    தலைவர்  மு.கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும்,   மு.க ஸ்காலின் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர். 

 இந்நிலையில் தி.மு.க கட்சியின் கோட்டையாக வர்ணிக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில்  மு.க ஸ்டாலினின் புதல்வரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

 சென்னை எப்போதுமே தி.மு.க-வின் கோட்டையாகவே கருதப்படுகிறது. குறிப்பாக ஆயிரம் விளக்கு தி.மு.க-வின் நம்பிக்கைக்குரிய தொகுதியாகத் திகழ்வதால் உதயநிதி இத்தொகுதிக்கு குறி வைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS