"என்னைப் பார்த்து தப்பித் தவறி சிரித்துவிடாதீர்கள் முதல்வரே"-  மு.க ஸ்டாலின் 

தமிழகம்
Typography

சென்னை,  பிப்ரவரி 17-  "தற்போது பதவியேற்றுள்ள முதல்வர், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் என்னைப் பார்த்து தவறி  கூட சிரித்துவிட வேண்டாம் " என  திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்ற பன்னீர்செல்வம், சட்டசபையில் முக ஸ்டாலினைப் பார்த்து சிரித்தார் என சசிகலா குற்றஞ்சாட்டினார்.  

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம் சிரிப்புதான். மனிதர்கள் தான் சிரிப்பார்கள். மிருகங்களுக்குச் சிரிக்கத் தெரியாது என்று கூறினார். 

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நிகழ்ந்த அரசியல் கலவரங்களுக்குப் பிறகு நேற்று  எடப்பாடி  பழனிச்சாமி புதிய முதல்வராகப் பதவியேற்றார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், 

சட்டசபையில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டதற்கு பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டது. இதேபோல்  புதிய முதல்வருக்கும் நடந்து விடக்கூடாது என்பதால் முன்னெச்செரிக்கையாகவே தாம் இதைக் கூறுவதாக அவர் தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS