நாளை கூடுகிறது சட்டசபை: பெரும்பான்மையை நிரூபிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி? 

தமிழகம்
Typography

 

சென்னை, பிப்ரவரி 17-  தமிழக சட்டசபை நாளைக் காலை 11  மணிக்குக் கூடுகிறது. இதனையடுத்து,  தமிழகத்தின்  13-வது முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  தமது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். 

முன்னதாக, நேற்று  ஆட்சி அமைக்க அழைக்காமல் இருந்து வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்தார்.   

இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பழனிச்சாமிக்கு முதல்வராகப் பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர், அடுத்த 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நாளை காலை 11 மணிக்குச் சட்டசபை கூடும் என்றும் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS