தமிழகத்தின் 13-வது முதல்வராகப் பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி 

தமிழகம்
Typography

 

சென்னை, பிப்ரவரி 16 - தமிழகத்தின் 13-வது முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு  ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்ற  ஓ.பன்னீர்செல்வம் இரண்டு  மாதம் கடந்த நிலையில் திடிரென ராஜினாமா செய்தார்.  இதனையடுத்து சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வானார். 

அதோடு தம்மை ஆட்சியமைக்க அழைக்கவும் ஆளுநரைக் கேட்டுக் கொண்டார். ஆனால், சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால், அவரை ஆட்சி அமைக்க அழைக்கவேயில்லை. 

இந்நிலையில்தான், தாம் கட்டாயப்படுத்தப்பட்டு தான் ராஜினாமா செய்யவைக்கப்பட்டதாக  அறிவித்ததோடு தமக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 

ஆனால் தற்போது, சசிகலாவிற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைத்ததைத் தொடர்ந்து,  தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு  ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.   

இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 13-வது முதல்வராகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவரோடு 30 அமைச்சர்களும்  பதவியேற்று வருகின்றனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS