'அம்மா'வைக் கொன்றவர்களிடமே அரசை ஒப்படைப்பதா? -ஓபிஎஸ் ஆவேசம்!

தமிழகம்
Typography

 சென்னை, பிப்.16- சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து அரசு அமைக்க ஆளுனர் அனுமதித்து இருப்பது குறித்து தமிழக மக்கள் கொதிப்பு அடைந்துள்ளனர். மக்கள் நல அரசை நிலைநாட்டுவதற்காக அறப்போரை தொடர்ந்து நடத்துவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசத்துடன் கூறினார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றிருக்கும் நிலையில் மேற்கண்டவாறு பன்னீர்செல்வம் சபதம் எடுத்தார்.

இந்நிலையில், இது குறித்து பன்னீர்செல்வம் கூறுகையில், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த அ.தி.மு.க. ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிடக்கூடாது. அதைத் தடுக்கவே அறப்போராட்டத்தைத் தொடங்கியதாக தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்தனர். ஆனால் அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மையமாகக் கொண்டுகோர் அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதை எண்ணி தமிழக மக்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் கொதித்துப் போயுள்ளனர் என்று பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

அம்மா ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் கையிலா தமிழக அரசாங்கம்? என்று மக்கள் துடித்துப் போயிருக்கின்றனர். இதற்காகவே தான் ஒரு தர்ம யுத்தத்தை நடத்தினேன். இந்த அறப்போர் ஓயாது. தொடரும்...என்று அவர் கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS