ஆட்சியைக் கைப்பற்றுவது எப்படி? வழக்கறிஞருடன் சந்திப்பு நடத்திய ஒபிஎஸ் ஆதரவாளர்கள் 

தமிழகம்
Typography

சென்னை,  பிப்ரவரி 16-  ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவது எப்படி என  ஒபிஎஸ் ஆதரவு அமைச்சரான மாஃபா பாண்டியராஜன், செம்மலை ஆகியோர் மூத்த வழக்கறிஞருடன் சந்திப்பு நடத்தினார்கள். 

ஒபிஎஸ்  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், சசிகலா ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்தார். ஆனால், ஆளுனர் அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தினார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். 

இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் நாவ் ஆட்சி அமைக்க அழைத்ததால், ஒபிஎஸ் தரப்புக்குப் பதற்றம் ஏற்பட்டது. 

ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்த உடன், ஒபிஎஸ்-சுக்கு ஆதரவு தரும்  மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரைந்து, மூத்த வழக்கறிஞர்  ஜோதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவருடன் ஒபிஎஸ் அணிக்கு மாறிய செம்மலையும் உடனிருந்தார். 

ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்துள்ளதால் ஒபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், ஒபிஎஸ் ஆட்சியைத் தொடர என்னன்ன வழிவகைகள் இருக்கிறது என்பது குறித்து தீவிரமாக மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS