"ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்!"- சசிகலா சதியை அம்பலமாக்கினார் ஓ.பன்னீர்செல்வம்! (VIDEO)

தமிழகம்
Typography

சென்னை, பிப். 8- "என்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள். ராஜினாமா கடிதம் வாங்கினார்கள். தமிழக மக்கள் விரும்பினால், ராஜினாமா கடிதத்தை மீட்டுக் கொள்வேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சென்னையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கும் கட்சிக்கும் எதிராச சிகலா கும்பல் செய்த அட்டூழியங்களை எல்லாம் போட்டுடைத்தார்.

சசிகலா தன்னை கட்டாயப்படுத்திதான் ராஜினாமா கடித்தத்தை பெற்றார் எ அவர் அறிவித்திருப்பதானது, சசிகலா முதல்வராக பதவியேற்பதில் பெரும் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பகிரங்க குற்றச்சாட்டால் சசிகலா தரப்பு பீதியில் உறைந்துள்ளது.

சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை வரவேற்று தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குறிப்பாக சசிகலா எதிர்ப்பாளர் கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ், பி.எச்.பாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

அதிமுக பெண் தொண்டர்கள் பலரும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பல இடங்களில் பார்க்க முடிந்தது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS