மோடிக்கு  கறுப்புக் கொடி!  சீமான்  உள்பட ஆயிரங்கணக்கானோர் கைது

தமிழகம்
Typography

சென்னை, ஏப் 12- பிரதமர்  மோடிக்கு கறுப்புக் கொடி  போராட்டம் நடத்திய வந்த இயக்குநர்கள் பாராதிராஜா, அமீர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்யததால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டுவோம் என்று அரசியல் கட்சினரும் தமிழ் ஆர்வலர்களும் விவசாயிகளும் தெரிவித்தனர்.

அதன்படி தமிழக வாழ்வுரிமை கட்சியினர், விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அது போல் விமான நிலையப் பகுதியில், இயக்குநர்கள் பாராதிராஜா , அமீர், கௌதமன் , கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்தனர்.

அனைவரும் மோடிக்கு எதிராக உணர்ச்சிகரமாக கோஷமிட்டனர். மோடியே திரும்புப் போ என்று கோஷமிட்டனர். மேலும் தமிழக வாழ்வுரிகை கட்சியினர் விளம்பர பதாகைகள் மீது ஏறி அபாயகரமான வகையில் போராட்டம் நடத்திடவர்களிடம் பாரதிராஜா கீழே இறங்குமாறு கோரிக்கை விடுத்தார். 

அதை ஏற்று அவர்கள் கீழே இறங்கினர். அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடியே திரும்பிப் போ என்றும் அவர்களுக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று பேசிய தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாரதிராஜா உள்ளிட்டோர் கோஷமிட்டனர். 

இதையடுத்து பாரதிராஜா ,அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர். அப்போது பாரதிராஜா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது ஆவேசமாக கோஷமிட்டார். இயக்குநர்கள் அமீர், கௌதமன் கரு பழயனியப்பன் சேர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பின் அனைவரும் அங்கிருந்து வேனில் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர்.

இதே போல பரங்கி மலையில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற சீமான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS