காவிரிக்காக ரயில் மீது ஏறி போராட்டம்: மின்சாரப் பாய்ந்து கருகிய கொடுமை!

தமிழகம்
Typography

திண்டிவனம் ,ஏப் 11-  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திண்டிவனத்தில் ரயில்மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து  சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இன்று திண்டிவனம் ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர்,  சென்னையில் இருந்த வந்த குருவாயூர் விரைவு ரயிலை  மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரஞ்சித் என்பவர் ரயில் மீது ஏறி முழக்கமிட்டபடியே நடந்து சென்றுள்ளார். உணர்ச்சி மிகுதியில் மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பியை உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவர் உடனடியாக தூக்கி வீசப்பட்டார். 

உடல் முழுவதும் கருகிய நிலை யில் மீட்கப்பட்ட ரஞ்சித்துக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் முதற் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் ரஞ்சித் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS