'தழுக் மொழுக்' போய், ஒல்லிக்குச்சியாக மாறிய ஹன்சிகா ! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழகம்
Typography

சென்னை, மார்ச்.10- அப்படியே 'தழுக் மொழுக்' குன்னு ததும்பத் ததும்ப இருந்த நடிகை ஹன்சிகா ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக மாறி இருப்பது கண்டு  ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளானர்.

2011ஆம் ஆண்டு தமிழ்ப் படங்களில் அறிமுகமானார் ஹன்சிகா. தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது  வாய்ப்புக் குறைந்த நிலையில் அல்லாடிக்கொண்டிருக்கிறார். முன்பு போன்று பட வாய்ப்புக்கள் கை நிறைய  இல்லை.

ஹன்சிகா என்றாலே அவர் 'தழுக் மொழுக்' என்று இருந்தது தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். அவருக்கு அது தான் அழகும் கூட என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஹன்சிகா திடீர் என்று தனது உடல் எடையைக் குறைக்க முடிவு செய்து கஷ்டப்பட்டு குறைத்தும் விட்டார். இது பிரபுதேவாவின் அறிவுரையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  ஆனால் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

ஹன்சிகா கருப்புநிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'ஹன்சிகா, நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க, பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பழையபடி 'தழுக் மொழுக்'கென்று ஆகுங்க.. ' என ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS